#ஆதார் மற்றும் பான் எண் இணைக்க ஜூன் 30 தேதி வரை காலம் நீட்டிப்பு..!
செவ்வாய்க்கிழமை வருமான வரித்துறை வெளியிட்ட அறிவிப்பில், ஜூலை 1, 2023 முதல் இணைக்கப்படாத அனைத்து பான் கார்டுகள் செயலிழந்துவிடும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய நேரடி வரி வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆதார் - பான் இணைப்பிற்கு மார்ச் 31 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்ட நிலையில், வருமான வரி செலுத்துவோருக்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் செயலிழந்த பான் கார்டு-ஐ மீண்டும் இயக்க வேண்டுமெனில்
1000 ரூபாய் அபராதம் தொகை செலுத்தி செயலிழந்த 30
நாட்களுக்குள் இயக்க ஒரு வாய்ப்பு உள்ளது.
ஐடி சட்டம்,
1961 இன் படி, அனைத்து பான் வைத்திருப்பவர்களும் தங்கள் பான் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.
31.3.23க்கு முன் ஆதார்.
1.4.23 முதல், இணைக்கப்படாத
PAN செயலிழக்கப்படும். இன்றே இணைக்கவும்! என வருமான வரித்துறை தெரிவித்திருந்து இதை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
Comments
Post a Comment