ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உச்ச முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழு (சிபிடி) செவ்வாயன்று நடந்த கூட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டிற்கான இபிஎஃப் -க்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை வழங்க முடிவு செய்துள்ளது
• 2022-23க்கான வட்டி விகிதத்தை இபிஎஃப்ஓ அறிவித்துள்ளது.
• இபிஎஃப்ஓ, வைப்புகளுக்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை நிர்ணயித்துள்ளது.
• திங்களன்று தொடங்கிய இரண்டு நாள் கூட்டத்தின் இரண்டாவது நாளான இன்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2022-23க்கான வட்டி விகிதத்தை இபிஎஃப்ஓ அறிவித்துள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 2022-23க்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை சற்று முன்னர் அறிவித்தது. ஓய்வூதிய நிதி அமைப்பான இபிஎஃப், வைப்புகளுக்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை நிர்ணயித்துள்ளது. திங்களன்று தொடங்கிய இரண்டு நாள் கூட்டத்தின் இரண்டாவது நாளான இன்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இபிஎஃப்ஓ, 2021-22 க்கான இபிஎஃப் மீதான வட்டியை 8.1 சதவீதமாகக் குறைத்தது. இது நான்கு தசாப்தங்களில் மிகக் குறைவான வட்டி விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் சுமார் ஐந்து கோடி இபிஎஃப் சந்தாதாரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1977-78 நிதியாண்டில் இபிஎஃப் வட்டி விகிதம் 8 சதவீதமாக இருந்தது. அதன் பிறகு 2021-22 நிதியாண்டில்தான் இபிஎஃப் வட்டி விகிதம் இத்தனை குறைவாக இருந்துள்ளது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உச்ச முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழு (சிபிடி) செவ்வாயன்று நடந்த கூட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டிற்கான இபிஎஃப் -க்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன,
2020-21 ஆம் ஆண்டிற்கான இபிஎஃப் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 8.5 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும் என்ற முடிவை மார்ச் 2021 இல் சிபிடி எடுத்தது.
நிதி அமைச்சகத்தின் ஒப்புதல்
சிபிடி -யின் முடிவிற்குப் பிறகு, 2022-23 -க்கான இபிஎஃப் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் ஒப்புதலுக்காக நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்படும்.
அரசாங்கத்தின் ஒப்புதலுக்குப் பிறகு, 2022-23க்கான இபிஎஃப் மீதான வட்டி விகிதம் இபிஎஃப்ஓ -வின் ஐந்து கோடி சந்தாதாரர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.
நிதி அமைச்சகம் மூலம் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே இபிஎஃப்ஓ வட்டி விகிதத்தை வழங்குகிறது.
மார்ச் 2020 இல், இபிஎஃப்ஓ, 2019-20 -க்கான வருங்கால வைப்பு நிதி டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 8.5 ஆக குறைத்தது. 2018-19 நிதி ஆண்டில் இந்த விகிதம் 8.65 சதவீதமாக இருந்தது. 2019-20 ஆம் ஆண்டிற்கான வருங்கால வைப்பு நிதி டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் அப்போது ஏழு ஆண்டுகளில் இல்லாத குறைந்த அளவில் நிர்ணயிக்கப்பட்டது.
இபிஎஃப்ஓ, 2016-17 ஆம் ஆண்டில், அதன் சந்தாதாரர்களுக்கு 8.65 சதவீத வட்டி விகிதத்தையும் 2017-18 இல் 8.55 சதவீதத்தையும் வழங்கியது. 2015-16ல் வட்டி விகிதம் சற்று அதிகமாக 8.8 சதவீதமாக இருந்தது.
ஓய்வூதிய நிதி அமைப்பான இபிஎஃப்ஓ, 2013-14 மற்றும் 2014-15 இல் 8.75 சதவீத வட்டியை வழங்கியது, இது 2012-13 இல் வாங்கப்பட்ட 8.5 சதவீதத்தை விட அதிகமாகும். 2011-12ல் வட்டி விகிதம் 8.25 சதவீதமாக இருந்தது.
Comments
Post a Comment