#ஆதார் மற்றும் பான் எண் இணைக்க ஜூன் 30 தேதி வரை காலம் நீட்டிப்பு ..! பான் எண் எனப்படும் நிரந்தரக் கணக்கு எண் அட்டை மற்றும் ஆதார் அட்டையை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது . செவ்வாய்க்கிழமை வருமான வரித்துறை வெளியிட்ட அறிவிப்பில் , ஜூலை 1, 2023 முதல் இணைக்கப்படாத அனைத்து பான் கார்டுகள் செயலிழந்துவிடும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது . மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய நேரடி வரி வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆதார் - பான் இணைப்பிற்கு மார்ச் 31 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் , வருமான வரி செலுத்துவோருக்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது . இதன் மூலம் ஜூன் 30, 2023 வரை பான் கார்டு ஆதார் கார்டுகளுடன் இணைக்கலாம் . இப்படி இணைக்கப்படாத பான் கார்டு அனைத்தும் ஜூலை 1 ஆம் தேதி முதல் செயல்படாது என்று நிதி அமைச்சகம் மத்திய நேரடி வரி வாரியத்தின் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது . பான் எண் மற்றும் ஆதார் எண் உ...